அச்சக ெதாழிலாளிகள் கவலை தோகைமலை பகுதியில் தமிழ்சங்கம் சார்பில் மரக்கன்று நடும் விழா

தோகைமலை, ஜன 12:தோகைமலை அருகே ஆலத்தூர், நெய்தலூர், முதலைப்பட்டி, சேப்ளாப்பட்டி ஊராட்சிகளில் தோகைமலை தமிழ்சங்கம் சார்பில் பனைவிதை மற்றும் பல்வகை மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆலத்தூர் ஊராட்சியில் ஜெயபால், முதலைப்பட்டியில் மணிகண்டன், சேப்ளாப்பட்டியில் விமலா காமராஜ், நெய்தலூரில் ஒன்றிய கவுன்சிலர் சுந்தரவள்ளி ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் தோகைமலை தமிழ்சங்க இயக்குனர் சந்தீப்குமார், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சந்திரசேகர், ஒன்றியக்குழு துணை தலைவர் பாப்பாத்தி சின்னவழியான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக தோகைமலை தமிழ்சங்க நிறுவனர் மற்றும் சமூகஆர்வலர் காந்திராஜன் கலந்துகொண்டு ஆலத்தூர், நெய்தலூர் முதலைப்பட்டி, சேப்ளாப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் பள்ளி வளாகம், பொது இடங்கள், கோயில் வளாகம் ஆகிய பகுதிகளில் மழைவேம்பு, அரசம்கன்று உள்ளிட்ட 2 ஆயிரம் பல்வகை மரக்கன்றுகளை நட்டு வைத்தார். தொடர்ந்து ஏரிகள், அரசு பள்ளிகள், கோயில்கள் என பல்வேறு இடங்களில் பனைவிதை, வேம்பு, அரசம்கன்று, கோவாபில் உள்பட பல்வகை மரக்கன்றுகளை நட்டனர். நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க தலைவர்கள் ரத்தினம், முருகேசன், தமிழ் சங்க தலைவர் மாணிக்கம், செயலாளர் குணசேகரன், பொருளாளர் செந்தில்குமார், செல்வம், ராஜாபிரதீப், ஒன்றிய கவுன்சிலர் சுமதி, சரண்யா மற்றும் ஊராட்சி மன்ற துணை தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர்கள் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: