நாற்றாங்கால் அமைக்கும் பணி தீவிரம்

சின்னமனூர், ஜன 12: சின்னமனூர் பகுதியில் 2ம் போகத்திற்கு நாற்றாங்கால் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கம்பம் பள்ளத்தாக்கில் சின்னமனூர் பகுதியில் 4 ஆயிரம் ஏக்கரில் முதல் போக அறுவடை முடிந்துள்ளது. இந்நிலையில், கடந்த 6 மாதமாக குளங்களில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீர் மற்றும் முல்லைபெரியாற்று தண்ணீர் ஆகியவற்றை இரண்டாம் போக நெல் நாற்றாங்கால் அமைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஒருசில விவசாயிகள் வயல்களில் போர்வெல் அமைத்து நெல் சாகுபடி செய்து வருகின்றனர். மேலும், இம்மாதம் நல்ல மழையிருக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளதாலும், 60, 70 பயிராக நெல் வளர்ந்த நிலையில், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் அதை சமாளிக்கலாம் என  மார்க்கையன்கோட்டை, குச்சனூர், சின்னமனூர் பகுதிகளில் நாற்றாங்கால் பாவிடும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: