விழிப்புணர்வு நிகழ்ச்சி

காரைக்குடி, ஜன.12:காரைக்குடி அருகே கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் சாசன கணக்காளர் நிறுவனத்தின் தென்மண்டல சிவகாசி கிளை சார்பில் சாசன கணக்காளர்கள் படிப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சிவகாசி கிளை தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் மாணிக்கவாசகம் துவக்கி வைத்து பேசுகையில், கடின உழைப்பு, தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியுடன் ஒருமித்த கவனத்துடன் படித்தால் சி.ஏ தேர்வை எளிதில் எதிர்கொள்ளலாம். தேவை அதிகமாக உள்ளதால் இப்படிப்பு முடித்தவுடன் எளிதில் பணி மேற்கொள்ளலாம் என்றார். முன்னாள் தலைவர் வீரபத்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கார்த்திக் ஜவஹர் நன்றி கூறினார்.

Related Stories:

>