பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பம்

சிவகங்கை, ஜன.12: பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2020-2021ம் நிதியாண்டிற்கு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயனடைய ஆண் வாரிசு இல்லை என்பதற்கான சான்று, வருமானச் சான்று (குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும்), ஒரு பெண் குழந்தை அல்லது இரண்டு பெண் குழந்தையுடன் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்த சான்று(தாய் அல்லது தந்தை 35 வயதிற்குள் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொண்டவராக இருத்தல் வேண்டும்), இரண்டாவது பெண் குழந் தை பிறந்த மூன்று ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்(ஒரு பெண் குழந்தையுடன் குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டவராக இருந்தால் பெண் குழந்தை பிறந்த மூன்று ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்), இரண்டு பெண் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ்(பெற்றோர் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்), சாதிச் சான்றிதழ், பெண் குழந்தையின் தாய் மற்றும் தந்தையின் வயது சான்று, குடும்ப போட்டோ ஆகியவற்றுடன் அரசு இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>