பருத்தி சாகுபடி திட்டத்தில் மானிய விலையில் இடுபொருள்கள் வழங்கல்

பரமக்குடி, ஜன.12: பரமக்குடி வட்டாரத்தில் தமிழ்நாடு பருத்தி சாகுபடி இயக்கத் திட்டத்தின் கீழ் பருத்தியில் ஊடுபயிராக உளுந்து சாகுபடி செய்வதற்கு மானிய விலையில் இடுபொருள்களை கலெக்டர் விவசாயிகளுக்கு வழங்கினார்.

பரமக்குடி வட்டாரத்தில் வேளாண்மை துறை சார்பாக தமிழ்நாடு பருத்தி சாகுபடி இயக்கத் திட்டத்தின் கீழ் பருத்தியில் ஊடுபயிராக உளுந்து சாகுபடி செய்வதற்கும் மற்றும் பருத்தி நுண்ணூட்டச்சத்து வழங்குவதற்கும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. பரமக்குடி வட்டாரத்தில்  வளையனேந்தல் கிராமத்தில் இயந்திரம் மூலம் நெல் நடவு செய்த  விவசாயி கண்ணனின் வயலில் நெல் சாகுபடி செய்ததை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார். பின்னர் பரமக்குடி வட்டாரத்தில் பருத்தியில் ஊடுபயிராக உளுந்து சாகுபடி செய்வதற்கு 50 சதவீதம் மானியத்தில் உளுந்துவிதையும், பருத்தியில் இடுவதற்கு  50 சதவீத மானியத்தில் நுண்ணூட்டமும்  விவசாயிகளுக்கு வழங்கினார். மேலும் தார்ப்பாய், மழைதூவான், ஆயில் இன்ஜின் ஆகியவற்றை50 சதவீத மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர்    குணபாலன்,  வேளாண்மை துணை இயக்குனர்கள்

கண்ணையா(உழவர் பயிற்சி நிலையம்), ஷேக் அப்துல்லா (மாநில திட்டம்), பாஸ்கரமணியன்(மத்திய திட்டம்), பரமக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தாமரைச் செல்வி, கூட்டுறவு சங்க தலைவர் லாடசெல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: