ஜெனகை மாரியம்மன் கோயிலில் முகூர்த்தக் கால் நடும் விழா

சோழவந்தான், ஜன.12:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் வரும் 25ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான முகூர்த்த கால் நடும் விழாவிற்காக நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் எம்.எல்.ஏ மாணிக்கம் தலைமையில்,செயல் அலுவலர் இளமதி, திருப்பணிக்குழு தலைவர் பதஞ்சலி சுப்பிரமணியன் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க முகூர்த்த கால் நடப்பட்டு,அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் பேரூராட்சிகளில் உதவி இயக்குனர் சேதுராமன், செயல் அலுவலர் ஜீலான்பானு மற்றும் திருப்பணிக் குழுவினர், மண்டகப்படிதாரர்கள்,காவல் குடும்பத்தினர், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள்,கோயில் பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>