உசிலம்பட்டியில் நோய் பரப்பும் அரசு அலுவலக பகுதி

உசிலம்பட்டி, ஜன.12:  உசிலம்பட்டியிலுள்ள மாவட்ட கல்வி அலுவலகம், உதவி தொடக்க கல்வி அலுவலகம் பகுதி சேரும், சகதியுமாக கிடக்கிறது. உசிலம்பட்டியில் சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு மேல்நிலை பள்ளிக்கு புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டு மாணவர்கள் புதிய வகுப்பறைக் கட்டிடங்களில் படித்து வருகின்றனர். முன்னால் இருந்த அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடத்தில் தற்போது மாவட்ட கல்வி அலுவலகமும், உதவி தொடக்க கல்வி அலுவலகமும், செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு செல்ல முடியாமல் வளாகம் முழுவதும் சேரும், சகதியுமாக கிடக்கிறது. இங்குள்ள அலுவலகங்களுக்கு டூவீலர் முதல் எந்த வாகனங்களும் செல்ல வேண்டுமென்றால் இந்த சகதி கிடங்கில் விழுந்துதான் செல்ல வேண்டும். இதனால் அலுவலர்களும், பொதுமக்களும் அங்குள்ள அலுவலகங்களுக்கு செல்ல முடியவில்லை. இது தற்காலிக அலுவலகமாக இருந்தாலும் சுகாதாரமற்ற முறையில் நோய் பரப்பும் சூழலில் உள்ளது.

மேலும் சுகாதாரத்தை கற்று கொடுக்கும் கல்வி அலுவலகத்திற்கே இந்த நிலை என்றால், மற்ற பிரச்னைகளை எப்படி காண்பது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>