பஞ்சாயத்துகளில் பணிபுரியும் பம்ப் ஆபரேட்டர்களுக்கு காலமுறை ஊதியம் மாநாட்டில் தீர்மானம்

திருமங்கலம், ஜன.12: தமிழகதில் கிராம பஞ்சாயத்துகளில் குடிநீர் திறப்பு பணியில் ஈடுபட்டுள்ள பம்ப் ஆபரேட்டர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் என திருமங்கலத்தில் நடந்த மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு கிராமப்புற மேல்நிலை தொட்டி இயக்குவோர் துப்புரவு வேலை செய்வோர் நலச்சங்கத்தின் மதுரை மாவட்ட மாநாடு நேற்று திருமங்கலத்தில் நடந்தது. பொதுச்செயலாளர் செல்வம் தலைமை வகித்தார். தலைவர் சேது, பொருளாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் உதயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர்கைலாசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கிராம பஞ்சாயத்துகளில் பணிபுரியும் பம்ப் ஆபரேட்டர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். ஓய்வூதியம் வழங்கவேண்டும். தூய்மை காவலர்களுக்கு பஞ்சாயத்துகளில் பணி பதிவேடுகளான எஸ்.ஆர் பதிவு செய்யவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்டத்திலுள்ள அனைத்து ஒன்றியங்களிலிருந்தும் ஏராளமான பம்ப் ஆபரேட்டர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: