பில்லமநாயக்கன்பட்டியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதி

திண்டுக்கல், ஜன. 12: திண்டுக்கல் அருகே பில்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்து மனு அளித்தனர். பின்னர் அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘பெரியகோட்டை ஊராட்சி பில்லமநாயக்கன்பட்டி விஸ்தரிப்பு ஏரியாவில் 150 வீடுகளுக்கு மேல் உள்ளது. இங்கு வாய்க்கால் வசதி இல்லாததால் பெருமாள் கோயில், முனியப்பன் கோயில் பாதைகளில் மக்கள் சென்று வர முடியாத அளவிற்கு கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. போதிய குடிநீர் வசதி இல்லாததால் மக்கள் தவித்து வருகின்றனர். அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பால் சாலை சுருங்கி கொண்டே வருகிறது. இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலகம், ஊராட்சி அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும் எந்த பலனும் கிடைக்கவில்லை. எனவே அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: