×

தேசிய மாணவர் படை தினம் கொண்டாட்டம்

 

பள்ளிபாளையம், டிச.1: பள்ளிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தேசிய மாணவர் படை தினம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் மகேஸ்வரன் தலைமை வகித்து தேசிய மாணவர் படையின் தோற்றம், தொன்மை குறித்து பேசினார். என்சிசி அலுவலர் கார்த்தி வரவேற்றார். மாணவர்களுக்கு ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. போலீஸ் எஸ்ஐ குணசேகர் தேசிய மாணவர் படையில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பேசினார். வழக்கறிஞர் சந்திரசேகரன் பரிசு வழங்கி பாராட்டினார். ஹவில்தார் சங்கர் முதல் பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தலைமை காவலர் ஸ்ரீகுமார், மேலாண்மை குழு நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags : National Cadet Corps Day ,Pallipalayam ,Pallipalayam Government ,Boys' Higher Secondary ,School ,Headmaster ,Maheswaran ,National Cadet Corps ,NCC ,Officer ,Karthi ,
× RELATED ராசிபுரம் நகராட்சியில் கடை டெண்டர் ரத்து