குமரன் நினைவு நாளை முன்னிட்டு கொ.ம.தே.க. மாலை அணிவித்து மரியாதை

திருப்பூர், ஜன.12: திருப்பூர் குமரனின் 89ம் நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் குமரன் சிலைக்கு நேற்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்விற்கு மாநகர் மாவட்ட பொருளாளர் வேலுமணி தலைமை வகித்தார். வடக்கு மண்டல செயலாளர் வேலுச்சாமி, மேற்கு மண்டல செயலாளர் பொன்னுச்சாமி, கிழக்கு மண்டல செயலாளர் விஜயசாரதி, தெற்கு மண்டல செயலாளர் கனகராஜ், மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மணிமாறன், ஈஸ்வரமூர்த்தி, வடக்கு மண்டல தொழிற்சங்க செயலாளர் சுப்பிரமணியம், மேற்கு மண்டல துணை செயலாளர் சத்திய சிவக்குமார், மேற்கு மண்டல வர்த்தகர் அணி செயலாளர் சேரன் சிவக்குமார் உள்ளிட்டோர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Related Stories:

>