43 பகுதிகளில் போலீசார் நியமனம்

கோவை, ஜன.12: கோவை உப்பிலிபாளையம் சமுதாய கூடத்தில் பகுதி வாரியான போலீஸ் அலுவலர்கள் அறிமுக கூட்டம் நேற்று நடந்தது. இதில் போலீஸ் துணை கமிஷனர்கள் ஸ்டாலின், முத்தரசு, உமா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

துணை கமிஷனர் ஸ்டாலின் கூறுகையில், ‘‘கோவை மாநகர போலீஸ் எல்லைக்குள் 43 பகுதிகளில் (செக்டோரல்) 172 போலீசாரை இணைத்து குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு குழுவில் 4 போலீசார் இருப்பார்கள். அந்தந்த பகுதியில் நடக்கும் சம்பவங்கள், குற்றங்கள், மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான செயல்பாடுகள் குறித்து தகவல் தெரிவிக்க வாட்ஸ் அப் குழு அமைக்கப்படும். ஒவ்வொரு குழுவிலும் 100 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள். ஏரியாக்களின் செயல்பாடுகளை இந்த குழுவில் பதிவு செய்யலாம். மிகவும் ரகசிய தகவலாக இருந்தால் உயரதிகாரிகளுக்கு தகவல் அனுப்பலாம். இதன் மூலமாக குற்ற சம்பவங்கள், சமூக விரோத கும்பல்களின் ெசயல்பாடுகள் குறித்த விவரங்கள் உடனே தெரிந்துவிடும். போக்குவரத்து, இதர பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண முடியும்’’ என்றார்.

Related Stories: