பாஜ சார்பில் பொங்கல் விழா

உடுமலை, ஜன. 11: திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜ சார்பில் நம்ம ஊரு பொங்கல் என்ற தலைப்பில் பொங்கல் விழா திருமூர்த்திமலை காயத்திரி பீடத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் பொன்.ருத்ரகுமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் ஜோதீஸ்வரி கந்தசாமி, குட்டியப்பன், கோபாலகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் ரமஷ், மகளிர் அணி சித்ராதேவி, கலா மற்றும் நாகமாணிக்கம், கராத்தே சாமிநாதன், வடுகநாதன்,  தெய்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்த விழாவில் பாஜ மாநில செயற்குழு உறுப்பினர் மதுவந்தி அருண் பேசுகையில், தமிழ்நாடு ஆன்மிக பூமி. கடவுள் நம்பிக்கை உள்ள மாநிலம். பிரதமர் மோடி உலகில் நம்பர் ஒன் தலைவராக உள்ளார். விரைவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்துள்ளார். மோடி பிரதமராக இருப்பது நாம் செய்த புண்ணியம். பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும், என்றார். விழாவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Related Stories:

>