சாலை விபத்தில் காயம் அடைந்தவர்களை எம்.எல்.ஏ., தனது வாகனத்தில் மருத்துவமனை அழைத்து சென்றார்

பந்தலூர், ஜன.11: பந்தலூர் அருகே தேவாலா நீர்மட்டம் பகுதியில் சாலை விபத்தில் காயம் அடைந்தவர்களை எம்.எல்.ஏ., தனது வாகனத்தில் மருத்துவமனை அழைத்து சென்றார். கேரளா மாநிலம் வயநாடு கல்பட்டா பகுதியில் இருந்து கார் ஒன்று கூடலூர் சென்று கொண்டு இருந்தது. தேவாலா நீர்மட்டம் பகுதியில் சென்ற போதுஎதிரே வந்த சரக்கு ஆட்டோவுடன் மோதி விபத்துகுள்ளானது. இதில் பத்தேரி பகுதியை சேர்ந்த கார் டிரைவர் தாமஸ்(32), கோழிப்பாலம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுலைமான்(30). ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் பந்தலூரில் இருந்து கூடலூருக்கு சென்ற எம்.எல்.ஏ., திராவிடமணி சம்பவம் நடந்த பகுதியில் செல்லும் போது சம்பவத்தை பார்த்து காயம் அடைந்தவர்களை மீட்டு தனது காரில் ஏற்றிச்சென்று தேவாலாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்து உதவினார். விபத்து குறித்து தேவாலா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>