ஊட்டியில் பலத்த காற்று படகு இல்லம் சாலையில் மரம் விழுந்தது

ஊட்டி, ஜன. 11: ஊட்டியில் நேற்று பலத்த காற்று காரணமாக படகு இல்லம் சாலையில் கற்பூர மரம் ஒன்று முறிந்து விழுந்தது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக குன்னூர், மஞ்சூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் பனிமூட்டத்துடன் நல்ல மழை பெய்து வருகிறது. ஊட்டியில் எந்நேரமும் சாரல் பனிமூட்டம் காணப்படுகிறது. இதன் காரணமாக குளிர் நிலவி வருகிறது. இதனிடையே நேற்று காலை பனிமூட்டத்திற்கு மத்தியில் பலத்த காற்று வீசிய நிலையில் ஊட்டி ஏரியை ஒட்டி வளர்ந்திருந்த கற்பூர மரம் படகு இல்ல சாலையில் விழுந்தது. மின் கம்பிகள் மீது விழுந்ததால் மின் துண்டிப்பு ஏற்பட்டது. இருப்பினும் போதிய இட வசதி இருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. உடனடியாக தீயணைப்புத்துைறையினர் வரவழைக்கப்பட்டு மரம் வெட்டி அகற்றப்பட்டது.

Related Stories:

>