×

தாயுமானவர் திட்டத்தின் கீழ் டிசம்பர் 2,3ம் தேதிகளில் பொருட்கள் விநியோகம்

ஊட்டி,நவ.29:நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் 2,3ம் தேதிகளில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ரேசன் கடைகளில் 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள்,மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் அவர்களின் இல்லம் தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் தமிழ்நாடு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்று திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோக திட்ட பொருட்கள் டிசம்பர் மாதத்திற்கு வரும் 2,3ம் தேதிகளில் வழங்கப்படும்.இத்திட்டத்தினை முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தவறாமல் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது.

 

Tags : Nilgiris district ,Tamil Nadu ,
× RELATED அஞ்சலக வாடிக்கையாளர் குறைதீர்க்கும் கூட்டம்