×

சாம்ராஜ் மேல்நிலைப்பள்ளியில் இன்று நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாம்

ஊட்டி, நவ.29: நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாம், இன்று (29ம் தேதி) ஊட்டி வட்டாத்திற்குட்பட்ட சாம்ராஜ் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியிருப்பதாவது, பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புமருந்துத்துறை சார்பில் ‘கோத்திகிரி வட்டம் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடந்தது.அதனை தொடர்ந்து மாவட்டத்தில் இதுவரை 11 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் 12வது முகாம் இன்று (29ம் தேதி) ஊட்டி வட்டாரத்திற்குட்பட்ட சாம்ராஜ் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. இம்முகாம் காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இம்மருத்துவ முகாமிற்கு பல்வேறு சிறப்பு மருத்துவ நிபுணர்கள் வருகை தந்து சிறப்பு மருத்துவச் சேவைகள் அளிக்க உள்ளனர். எனவே, பொதுமக்கள் அனைவரும் இம்முகாமில் தவறாது கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான சிகிச்சைகள் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.

 

Tags : Stalin ,Samraj Higher Secondary School ,Ooty ,Nilgiris District ,Collector ,Lakshmi Bhavya Taninyu ,Public Health and Immunization Department ,Kothigiri Taluk ,
× RELATED அஞ்சலக வாடிக்கையாளர் குறைதீர்க்கும் கூட்டம்