×

நாகர்கோவிலில் பரபரப்பு பெற்றோர், அண்ணனை கத்தியால் குத்தி விட்டு மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை சொத்துக்காக கொல்ல பார்ப்பதாக புகார் அளித்தவர்

நாகர்கோவில், ஜன.11:  நாகர்கோவிலில் பெற்றோர், அண்ணனை கத்தியால் குத்தி விட்டு, பட்டதாரி வாலிபர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்தார். இவர் ஏற்கனவே கடந்த இரு நாட்களுக்கு முன், சொத்துக்காக தன்னை கொல்ல பார்க்கிறார்கள் என குடும்பத்தினர் மீது புகார் கூறியவர் ஆவார். நாகர்கோவில் நேசமணிநகர் பார்க் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் ஜெயதாஸ் (76). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவரது மகன் ஜேக்கப்(27). எம்.சி.ஏ. முடித்துள்ளார். இவர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவ்வப்போது வீட்டில் உள்ளவர்களிடம் ஜேக்கப், தகராறு செய்து பொருட்களை அடித்து நொறுக்குவார். எனக்கு கோடிக்கணக்கில் சொத்து உள்ளது. என்னை ெகால்ல பார்க்கிறீர்கள் என்பார். பின்னர் தனி அறையில் அடைத்து வைத்து சமாதானம் செய்வார்கள். சில சமயங்களில் அனைவரிடமும் நன்றாக பேசுவது வழக்கம்.

கடந்த 8ம்தேதி திடீரென கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த ஜேக்கப், கலெக்டர் அலுவலக அறை கதவை தட்டினார். ஆனால் அந்த சமயத்தில் கலெக்டர் இல்லை. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடி வந்து ஜேக்கப்பை பிடித்து இழுத்து சென்றனர். அப்போது போலீசார் காலில் விழுந்த அவர், சொத்துக்கு ஆசைப்பட்டு தனது தந்தை, அண்ணன் ஆகியோர் தனக்கு விஷம் கொடுத்து ெகால்ல முயற்சிப்பதாகவும். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட மனுவையும் அளித்தார். அவரை நேசமணிநகர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்ற போலீசார், பெற்றோரை வரவழைத்து விசாரித்தனர். பின்னர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்ததால், வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று (ஞாயிறு) மதியம் ஜேக்கப் வீட்டில் இருந்தார். அவரது பெற்றோர் மற்றும் அண்ணன் ஜெய்சன் (29) ஆகியோரும் இருந்துள்ளனர். அனைவரும் சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரம் அமைதியாக இருந்த ஜேக்கப் தகராறு செய்ய தொடங்கி உள்ளார். வீட்டில் இருந்த தாய், தந்தை, அண்ணனை சரமாரியாக அடிக்க தொடங்கினார். அவரை கட்டுப்படுத்த முடியவில்லை. திடீரென கத்தியை எடுத்து ஓடி வந்து தாய் சாலினியை குத்தினார். இதை தடுக்க முயன்ற தந்தை ஜெயதாஸ், அண்ணன் ெஜய்சன் ஆகியோரையும் குத்தினார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர். ஆனால் அதற்குள் மாடிக்கு ஓடி சென்ற ஜேக்கப் அங்கிருந்து கீழே குதித்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் நேசமணிநகர் போலீசார் விரைந்தனர். காயம் அடைந்த சாலினி, ஜெயதாஸ், ஜெய்சன் ஆகிய மூவரையும் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் 3 பேரும் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இதில் சாலினிக்கு கழுத்திலும், ஜெயதாசுக்கு கன்னத்திலும் காயம் ஏற்பட்டுள்ளது. ஜெய்சனுக்கு கையில் காயம்   உள்ளது. ஜேக்கப் உடலை பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். சொத்துக்காக கொலை செய்ய பார்க்கிறார்கள்? என புகார் கூறி வந்த நிலையில், பெற்றோர், அண்ணனை கத்தியால் கிழித்து விட்டு ஜேக்கப் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேசமணிநகர் இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags : parent ,Nagercoil ,brother ,suicide ,floor ,
× RELATED ஆரல்வாய்மொழியில் இருந்து...