பொங்கல் பரிசுத்தொகுப்பு வாங்க ஒரே இடத்தில் குவிந்த 3ஆயிரம் தொழிலாளர்கள்

இடைப்பாடி, ஜன.11: நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, நேற்று பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. இடைப்பாடி சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள், அதிகாலை முதலே இடைப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் குவிந்தனர். 600 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோ் திரண்டனர். இதனால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் விரைந்து சென்று கூட்டத்தை சரி செய்தனர். பின்னர், அனைவரையும் வரிசையாக நிற்க வைத்து ஒழுங்குப்படுத்தி, டோக்கன் முறையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது.

கொரோனா   காலத்தில் தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் டோக்கன்  கொடுக்கப்பட்டு பரிசுத்தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுத்திருக்கலாம் என கட்டிட தொழிலாளர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். கெங்கவல்லி: கெங்கவல்லியில் பரிசுத்தொகை வாங்க, நேற்று ஒரே நேரத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திரண்டனர். இதுகுறித்த தகவலின்பேரில் டிஎஸ்பி இமானுவேல் ஞானசேகரன் தலைமையில் வீரகனூர், தலைவாசல் மற்றும் ஆத்தூர் ரூரல் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து, தம்மம்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள், பள்ளிக்கு வரும் நபர்களை கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

Related Stories: