×

கருங்கற்கள் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

கிருஷ்ணகிரி, நவ.29: விழுப்புரம் கனிம வளத்துறை உதவி இயக்குனர் முத்து தலைமையிலான பறக்கும் படையினர், கிருஷ்ணகிரி- ராயக்கோட்டை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மலைச்சந்து என்ற இடத்தில் கேட்பாரற்று நின்ற மினி டிப்பர் லாரியில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், கிருஷ்ணகிரியில் இருந்து ராயக்கோட்டை பகுதிக்கு ரூ.3000 மதிப்பிலான 3 யூனிட் கருங்கற்களை கடத்தி வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து டிப்பர் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து தாலுகா காவல்நிலையத்தில் ஒப்படைத்து புகாரளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரியின் உரிமையாளர் மற்றும் டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Krishnagiri ,Villupuram Mineral ,Resources Assistant Director ,Muthu ,Krishnagiri-Rayakottai road ,Malai Chandhu ,
× RELATED கைக்குழந்தையுடன் இளம்பெண் மாயம்