தேன்கனிக்கோட்டை, நவ.29: தேன்கனிக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டில், எஸ்ஐ நாகராஜன் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்த பகுதியில் குடிபோதையில் நின்றிருந்த ஒருவர், அங்கு நின்ற பயணிகள் மற்றும் பொதுமக்களை ஆபாசமாக திட்டி இடையூறு செய்து கொண்டிருந்தார். அவரை மடக்கி பிடித்த எஸ்ஐ, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் தேன்கனிக்கோட்டை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் முகுந்தன் (38) என்பதும், பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சுங்கவரி வசூல் செய்து வந்ததும் தெரியவந்தது. இவர் வரி வசூல் செய்யும்போது, வாகன ஓட்டிகள் மற்றும் சாலையோர பெண் வியாபாரிகளை ஆபாசமாகவும், ரவுடி போல மிரட்டுவதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
