பக்கவாட்டில் சாய்ந்த லோடு லாரி தீராத வயிற்றுவலியால் புது மணப்பெண் தற்கொலை

மண்ணச்சநல்லூர், ஜன.11: மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி ஊராட்சி ஈச்சம்பட்டியை சேர்ந்த மனோகர் மனைவி சரஸ்வதி (20). இவருக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சரஸ்வதிக்கு மாதவிடாய் தொடர்பான பிரச்னையால் அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு வந்ததாம். அதற்காக சிகிச்சை அளித்தும் குணமடையாததால் மனமுடைந்த சரஸ்வதி நேற்று முன்தினம் அனைவரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரஸ்வதி உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>