அதிக தொகுதிகள் கொடுக்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி செட்டியார்கள் பேரவை முடிவு

திருச்சி, ஜன.11: திருச்சியில் தேசிய செட்டியார்கள் பேரவையின் மாநில மகளிரணி மாநாடு தாஜ் மஹாலில் நேற்று நடைபெற்றது. பேரவையின் நிறுவனத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா தலைமை வகித்து பேசுகையில், வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் செட்டியார்களுக்கு அதிக தொகுதிகளை கொடுக்கும் கட்சிகளிடம் கூட்டணி சேருவோம் என கூறினார். மாநாட்டில் கவுரவத் தலைவர்கள் சத்தியமூர்த்தி, அன்பழகனார், சேமநாராயணன், பன்னீர்செல்வம் , ஜெயராமன் , மாநில பொருளாளர் கணேசன், பாஸ்கர், தனியார் பத்திரிக்கை ஆசிரியர் மோகன், மாநில மகளிர் அணி பொருப்பாளர்கள் ராஜேஸ்வரி, கீதா. மாநில மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர்கள் சிவகாமசுந்தரி, சந்திரா, ஐடிவிங்க் மாநில துணைச்செயலாளர் பானுப்பிரியா, மகேஸ்வரி மற்றும் திருச்சி மாவட்ட மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர்களான முத்துமீனா, முத்துலெட்சுமி, மஞ்சு கெஜலெட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் 2021 தேர்தலில் சட்டமன்றத்திற்கு அதிக செட்டியார்கள் பிரதிநிதிகளை அனுப்புவது, செட்டியார்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி சேருவது, இல்லையெனில் அனைத்து தொகுதியிலும் தனித்து போட்டியிடுவது, விவசாய மேம்பாட்டு திட்டங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் முக்கியத்துவம் அளித்து, தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டிற்கு தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பெண்கள் குதிரை மற்றும் ஒட்டகத்திலும் வருகை புரிந்தனர். மாநாட்டையொட்டி புல்லட் போன்ற டூவீலர்களிலும் பெண்கள் ஊர்வலமாக வந்தனர். செண்டை மேளம், தப்பாட்டம், பேண்ட், நாதசுவரம், டோல் வாத்தியம் போன்ற பல்வேறு நாட்டுபுற இசைக்கருவிகளை பெண்களே இசைத்தனர்.

Related Stories: