தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தண்ணீரில் சாய்ந்தது

விராலிமலை, ஜன.11: விராலிமலை அருகே உள்ள துலுக்கம்பட்டி பகுதியில் தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மிதப்பதால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். விராலிமலை அடுத்துள்ள துலுக்கம்பட்டியில் உள்ள துலுக்கன் குளத்தின் பாசனத்தை பயன்படுத்தி விவசாயம் செய்த விவசாயிகள் தொடர் மழையால் வயல் வெளிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் விளைந்த பயிர்களை விவசாயிகள் அறுவடை செய்ய முடியாமல் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

மழை நீரில் கதிர்கள் சாய்ந்து மீண்டும் முளைக்காமல் இருக்க தண்ணீரை வடிக்க வாய்க்கால்களை வெட்டி சீரமைத்தும் பயன் இல்லை. தினமும் பெய்யும் தொடர் மழையால் மழைநீரில் கதிர்கள் மூழ்கி அழுகிய நிலையில் கிடப்பதால் அறுவடை செய்ய முடியாமல் கதிர்கள் வீணாவதை கண்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடன்களை வாங்கி நெல்களை பயிரிட்ட விவசாயிகள் கடன்களை அடைக்க முடியாமல் போகும் என்பதால் அரசு சேதமடைந்த பயிர்களை கணக்கெடுத்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: