அதிமுகவை நிராகரிப்போம் திமுகவின் மக்கள் கிராமசபை கூட்டம்

விராலிமலை, ஜன.11: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்தை சேர்ந்த களமாவூரில் திமுகவின் மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. விராலிமலை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் விராலிமலை கிழக்கு ஒன்றிய பகுதியில் மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி களமாவூரில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு விராலிமலை கிழக்கு திமுக ஒன்றிய செயலாளர் சத்தியசீலன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து பேசினர். இதையடுத்து அதிமுகவை நிராகரிப்போம் என்ற கையெழுத்து இயக்கத்தில் கையெழுதிட்டனர். கூட்டத்தில் திமுக கிளை செயலாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கறம்பக்குடி: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி திமுக வடக்கு ஒன்றியம் சார்பாக கரம்பவிடுதி ஊராட்சியில் அதிமுகவை நிராகரிப்போம் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கரம்பவிடுதி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தன் தலைமை வகித்தார். வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன், ஒன்றியக்குழு மாலா முன்னிலை வகித்தனர். திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன், மாநில இலக்கிய அணி அமைப்பாளர் கவிதைபித்தன், வடக்கு மாவட்ட துணை செயலர் மதியழகன், தலைமை செயற்குழு உறுப்பினர் கீரை தமிழராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள், பெண்கள் அனைவரும் பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். அடிப்படை வசதிகளை திமுக ஆட்சி அமைந்ததும் நிறைவேற்ற வேண்டும் என்று கூறி திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியனிடம் கோரிக்கை மனுக்களாக அளித்தனர். இவை அனைத்தும் மக்கள் கிராம சபை கூட்டத்தில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: