துலுக்கம்பட்டி விவசாயிகள் வேதனை திருமயம் ஊராட்சியில் ரூ.21.50 லட்சம் மதிப்பீட்டில் குப்பைமறுசுழற்சி கிடங்கு அமைக்கும் பணி துவக்கம்

திருமயம், ஜன.11: திருமயம் ஊராட்சியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் திருமயம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாகவும், திருமயத்தை சுற்றியுள்ள சுமார் 50 கிராம மக்களுக்கு போக்குவரத்து வசதி, அத்தியாவசிய பொருட்கள் வாங்க முக்கிய வணிக வளாகம் உள்ள ஊராக உள்ளது. இங்கு தாலுகா அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், அரசு மருத்துவமனை, கோர்ட் வளாகம், அரசு பள்ளிக்கூடங்கள் உள்ளதால் தினந்தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருமயம் வந்து செல்கின்றனர். இந்நிலையில் திருமயம் ஊராட்சியில் உள்ள வீடுகள், கடைவீதி, அரசு அலுவலகங்களில் தேங்கும் குப்பைகளை திருமயத்தில் இருந்து காரைக்குடி செல்லும் சாலை ஓரம் திறந்தவெளி குப்பை கிடங்கில் குப்பைகளை சேகரித்து வருகின்றனர். இங்கு போதுமான இடவசதி இல்லாததால் தினந்தோறும் வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை கொட்ட இடமில்லாமல் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை தீவைத்து அழிக்கப்பட்டு வந்தது.

இதனால் அப்பகுதியில் புகை மண்டலம் ஏற்பட்டு சாலையில் செல்பவர்களுக்கும், அப்பகுதியில் வசிப்பவர்களுக்கும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதோடு சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு காரணமாக இருந்து வந்தது. இதனை கருத்தில் கொண்டு திருமயம் பகுதி மக்கள் திருமயத்தில் உள்ள திடக்கழிவுகளை தரம் பிரித்து அவற்றை மறுசுழற்சி செய்ய குப்பை கிடங்கு ஏற்படுத்தி தர வேண்டும் என பல்வேறு அதிகாரிகளிடம் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் திருமயம் ஊராட்சி தலைவர் சிக்கந்தர் முயற்சியால் சுமார் 21 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் திருமயம் பாம்பாறு பாலம் அருகே குப்பை மறுசுழற்சி கிடங்கு அமைக்க நேற்றுமுன்தினம் பூமி பூஜை நடைபெற்றது. இதில் ஒன்றிய கவுன்சிலர் சரண்யா சரவணன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: