×

சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேர் கைது

புதுச்சேரி, நவ. 28: புதுச்சேரி கோரிமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி அருகே இளைஞர்கள் சிலர் சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு ெசன்றனர். அப்போது இளைஞர்கள் போலீசாரை பார்த்துடன் தப்பி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 700 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் 3 பேரை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் புதுவை சேர்ந்த தனுஷ் (20), சின்னயன்பேட்டை சேர்ந்த கார்த்திக்ராஜ் (19), செயின்ட் பால்பேட் பகுதியை சேர்ந்த கவுதம் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேர் மீது வழக்குபதிந்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் சென்னையில் இருந்த வாங்கியதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் 3 பேரையும் புதுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Tags : Puducherry ,Thattanchavadi Market Committee ,Korimedu police station ,Sub-Inspector ,Ramesh ,
× RELATED பண்ருட்டி அருகே பெண் திடீர் சாவு