×

சிறுமியை மிரட்டி பலாத்காரம் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை வேலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு காதலனுடன் தனிமையில் இருந்த

வேலூர், நவ. 28: காதலனுடன் இருந்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து வேலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவரும் அதே கிராமத்தை சேர்ந்த 24 வயது வாலிபரும் காதலித்தனர். மேலும் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனராம். இதேபோல் கடந்த 2019ம் ஆண்டு சிறுமியும், அவரது காதலனும் தனிமையில் இருந்துள்ளனர். அப்போது அதே கிராமத்தை ேசாந்த பிரதாப்(34), கூலித்தொழிலாளி. திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இவர் தனது செல்போனில் போட்டோ எடுத்துள்ளார். பின்னர் சிறுமியிடம், அந்த போட்டோவை காண்பித்து மிரட்டியதுடன் பாலியல் பலாத்காரம் செய்தாராம். இதேபோல் அடிக்கடி சிறுமியை பலாத்காரம் செய்தாராம். இதில் சிறுமி கர்ப்பமடைந்தார். இதையறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரதாப்பை கைது செய்தனர். இதற்கிடையில் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதுதொடர்பான வழக்கு வேலூர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராதாகிருஷ்ணன், குற்றம் சாட்டப்பட்ட பிரதாப்புக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து போலீசார், பிரதாப்பை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : Vellore POCSO court ,Vellore ,Peranambatu ,
× RELATED குறை தீர்வு கூட்டம் 10ம் தேதிக்கு...