பெரம்பலூர் மாவட்டத்தில் 15,700 கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.70.65 லட்சத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு

பெரம்பலூர்,ஜன.11:பெரம் பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலா ளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 15,700 கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு ரூ.70.65லட்சத்தில் வழங்கப்படுகிறது என கலெக்டர் வெங்கடபிரியா தெரிவித்தார். பெரம்பலூர் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 15,700 கட்டுமான தொழிலா ளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ரூ70.65 லட்சம் மதிப்பிலான பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கும் பணிகள் தொழிலாளர் நலத்துறை சார்பாக நடை பெற்றது. பெரம்பலூர் டிஆர்ஓ ராஜேந்திரன், சமூகப்பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொழிலாளர் உதவி ஆணையர் முகம்மது யூசுப் வரவேற்றார். நிகழ்ச்சியில் பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா கலந்து கொண்டு கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கும் பணிகளை தொடங்கி வைத்து பேசுகையில், தமிழ்நாடு கட்டுமான தொ ழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2021ம் ஆண்டிற்கான பொங்கல் பரிசுத் தொகுப்புகள் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 4,944தொழிலாளர்களுக்கும், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 2,828 தொழிலாளர்களுக்கும், வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 3,697 தொழிலாளர்களுக்கும், வேப்பந்தட்டை அரசுமேல்நிலைப் பள்ளியில் 4,231 தொழிலாளர்களுக்கும் என 15,700 தொழிலாளர்களுக்கு 70.65 லட்சம் மதிப்பீட்டில் பச்சரிசி, 2 கிலோ, பாசிப்பருப்பு 1 கிலோ, சமையல் எண்ணெய் 500 கிராம், நெய் 100 கிராம், வெல்லம் 1கிலோ, ஏலக்காய் 5 கிராம்,முந்திரிப் பருப்பு 25 கிராம் மற்றும் உலர்திராட்சை 25கிராம் என 8பொரு ட்கள் அடங்கிய தொகுப்பு ஒவ்வொரு கட்டுமான தொழிலாளர்களுக்கும் வழங்க ப்படுகிறது என்றார்.முடிவில் தொழிலாளர் உதவி ஆய்வாளர் சாந்தி நன்றி கூறினார்.

பெரம்பலூர் அரசு மேல்நி லைப் பள்ளியில் தொழி லாளர் நல வாரியத்தில் பதிவுபெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 4,944 பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கும் பணிகள் தொழிலாளர் நலத்துறை சார்பாக நடை பெற்றது. பணிகளை பெரம்பலூர்  எஸ்பி நிஷா பார்த்திபன்  பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிக ழ்ச்சியின்போது,பெரம்பலூ ர் தொழிலாளர் உதவி ஆணையர் முகம்மது யூசுப், பெரம்பலூர் டிஎஸ்பி கென் னடி, இன்ஸ்பெக்டர் ஜெயச் சித்ரா, தொழிலாளர் உதவி ஆய்வாளர் சாந்திஆகியோ ர் உடனிருந்தனர். பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொழிலா ளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழி லாளர்கள் மற்றும் ஓய்வூதி யதாரர்கள் ஆயிரக் கணக் கானோருக்கு நேற்று பொ ங்கல் பரிசுத்தொகுப்பு வழ ங்க ஏற்பாடுசெய்யப்பட்டது. இதனையொட்டி நேற்றுக் காலை 8.30மணிக்கே தொழிலாளர்கள் ஆண்கள் பெ ண்கள் எனத் திரண்டு வந் திருந்தனர். இவர்களனை வரும் ஆண்கள் தனியாக வும், பெண்கள் தனியாகவும் கட்டிட வராண்டாக்களில் 2மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தனர். கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் இப்பணிகளை தொடங்கி வைத்த பிறகே அரசு மேல்நிலைப்பள்ளியில் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் தொடங்கி நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: