எரிவாயு நுகர்வோர் கலந்தாய்வு கூட்டம்

கிருஷ்ணகிரி, நவ.28: கிருஷ்ணகிரியில் இன்று (28ம் தேதி) எரிவாயு முகவர்கள், நுகர்வோர்கள் மற்றும் எண்ணெய் நிறுவனங்களடன் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மூலம் நடத்தப்படும் எரியாயு நுகர்வேர்கள், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் எரிவாயு முகவர்களுனான நவம்பர் மாதத்திற்கான மாதாந்திர கலந்தாய்வு கூட்டம், இன்று (28ம்தேதி) மாலை 4.30 மணியளவில் மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், அனைத்து எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளதால், நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories: