×

மெக்கானிக் திடீர் சாவு போலீசார் விசாரணை

விக்கிரவாண்டி, நவ. 27: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தெற்கு தெருவை சேர்ந்தவர் சந்திரசேகரன்(40). இவர் விக்கிரவாண்டி அடுத்த சிறுவள்ளிக்குப்பம் பஸ் ஸ்டாப் அருகே உள்ள மெக்கானிக் ஷாப்பில் மெக்கானிக் வேலை பார்த்து வந்தார். நேற்றுமுன்தினம் மெக்கானிக் ஷாப்பில் சந்திரசேகரன் வேலை செய்து கொண்டிருந்த போது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த தகவலின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Vikravandi ,Chandrasekaran ,Sirkazhi South Street ,Mayiladuthurai district ,Siruvallikuppam ,
× RELATED பண்ருட்டி அருகே பெண் திடீர் சாவு