விதை நேர்த்தி செய்து விதைக்க அறிவுறுத்தல்

சிவகங்கை, ஜன.11: நிலக்கடலை விதைகளை விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும் என விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விதை பரிசோதணை அலுவலர் சிங்காரலீனா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் காளையார்கோவில், சிங்கம்புணரி, எஸ்.புதூர் மற்றும் சிவகங்கை பகுதிகளில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. விதைகளை உயிர் உரங்களுடன் நேர்த்தி செய்து விதைத்தால் ரசாயன உரச்செலவை குறைப்பதுடன், மண்ணின் தன்மையும் காக்கப்படுகிறது. தை பட்டத்தில் நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள் விதைப்பிற்கு முன் நிலக்கடலை விதைகளை விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

இதனால் முளைக்கும் பயிர் நோய் எதிர்ப்பு சக்தி பெற்று திரட்சியான மணிகளுடன் வளரும். உயிர் உர விதை நேர்த்திக்கு விதைப்பதற்கு முன் ஒரு எக்டேருக்கு தேவையான 125 கிலோ விதையுடன் 600 கிராம் ரைசோபியம் உயிர் உரத்தினை கலந்து பின் விதைக்க வேண்டும். ரைசோபியம் பாக்டீரியா பயிரின் வேர் முடிச்சில் இருந்து பயிருக்கு தேவையான தழைச்சத்தினை வளி மண்டலத்தில் இருந்து கிரகித்து கொள்கிறது. எனவே விவசாயிகள் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: