ரூ.5 கோடியில் சோலார் தெருவிளக்குகள்

கீழக்கரை, ஜன.11: ராமநாதபுரத்தில் ரூ.5 கோடியில் சோலார் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் அடல் ஜோதி யோஜனா(அஜய்) என்ற திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் சூரிய ஒளி விளக்குகளை அமைக்கும் பணி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு ரூ.583 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளில் அந்தந்த எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 25 சதவீதமும் இத்திட்ட நிதியிலிருந்து 75 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மத்திய அரசின் இத்திட்டத்தை பயன்படுத்தி ராமாநாதபுரம் எம்பி நவாஸ்கனி தொகுதி முழுவதும் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 2 ஆயிரம் சூரிய ஒளி தெரு விளக்குகளை அமைக்க ஏற்பாடு செய்துள்ளார்.

தனது தொகுதி நிதியிலிருந்து 25 சதவீதம் இதற்கென்று ஒதுக்கி பணிகள் நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட கீழக்கரையில் சோலார் தெரு விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நகர் முழுவதும் தேவைப்படும் இடங்களில் இந்த விளக்குகள் பொருத்தப்பட உள்ளது. ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி முயற்சியில் தமிழகத்தில் முதல் தொகுதியாக ராமநாதபுரம் தொகுதியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

Related Stories: