- பழனி
- சட்டமன்ற உறுப்பினர்
- ஐ.பி.செந்தில்குமார்
- பெத்தநாயக்கன்பட்டி
- சின்னக்கலையம்புத்தூர்
- தாதநாயக்கன்பட்டி
- Puliyampatti
- தோப்பம்பட்டி
பழநி, நவ. 26: பழநியில் 2 வழித்தடங்களுக்கான புதிய டவுன் பஸ்களை ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ துவக்கி வைத்தார். பழநியில் இருந்து சின்னக்கலையம்புத்தூர் வழியாக பெத்தநாயக்கன்பட்டி, மற்றும் புளியம்பட்டி, தொப்பம்பட்டி வழியாக தாதநாயக்கன்பட்டி ஆகிய ஊர்களுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் சேதமடைந்திருந்தன. இதனைத்தொடர்ந்து புதிய டவுன் பஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பஸ்களை நேற்று பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் பஸ் நிலையத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் நகராட்சித்தலைவர் உமாமகேஸ்வரி, திமுக நகர செயலாளர் வேலுமணி, ஒன்றிய செயலாளர்கள் சௌந்திரபாண்டியன், சுவாமிநாதன், நகர இளைஞரணி அமைப்பாளர் லோகநாதன், மாவட்ட நெசவாளரணி துணை அமைப்பாளர் பாஸ்கரன், நகர பொறியாளரணி அமைப்பாளர் வீரமணி, மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் இந்திரா திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
