ஆட்டையாம்பட்டி, நவ.26: அரியானூர் அடுத்துள்ள சீரகாபாடி பாலமுருகன் கோவில் அருகே வசித்து வருபவர் கார்த்திகேயன் மகன் ரஞ்சித்குமார் (33). அவர் ஹாலோபிரிக்ஸ் சிமெண்ட் கல் தயாரிக்கும் பணி செய்து வருகிறார். இதில் வாகன போக்குவரத்துக்காக பிக்அப் வேன் வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, பிக்அப் வேன் டிரைவர் ரவி, கடை முன்பு வாகனத்தை நிறுத்தி விட்டு, சாவியை வாகனத்திலேயே வைத்து விட்டு, அருகில் உள்ள ஷெட்டில் தூங்கினார். வழக்கம்போல் காலை 6 மணிக்கு, ரஞ்சித்குமார் கடைக்கு வந்து பார்த்த பொழுது, பிக்அப் வேன் திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், ஆட்டையாம்பட்டி போலீஸ் எஸ்ஐ கிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.
