×

நிதி தணிக்கை உதவி இயக்குனர் உட்பட 4 பேர் வழக்குப்பதிவு விஜிலென்ஸ் போலீசார் ₹1 லட்சம் பறிமுதல் எதிரொலி

வேலூர், ஜன.8: வேலூர் உள்ளாட்சி நிதி தணிக்கை அலுவலகத்தில் 1 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக உதவி இயக்குனர் உட்பட 4 பேர் மீது விஜிலென்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வேலூர் அண்ணாசாலையில் ஏலகிரி வளாகத்தில் உள்ள உள்ளாட்சி நிதி தணிக்கை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம், புத்தாண்டு பரிசாக லஞ்சம் பெறப்படுவதாக, வந்த தகவலை தொடர்ந்து, விஜிலென்ஸ் போலீசார் நடத்திய திடீர் ேசாதனையில், கணக்கில் வராத 1.04 லட்சம் பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து லஞ்சம் பெற்றதாக உதவி இயக்குனர் பரந்தாமன், லஞ்சம் கொடுத்ததாக பள்ளிகொண்டா பேரூராட்சி செயல் அலுவலர் மலர்மாறன், லஞ்சப்பணத்தை வசூல் செய்து கொடுத்ததாக அலுவலக கண்காணிப்பாளர் மாரிமுத்து, பள்ளிகொண்டா பேரூராட்சி பதிவு எழுத்தர் முரளி ஆகிய 4 பேர் மீது வேலூர் விஜிலென்ஸ் போலீசார், ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED முதல் வாக்காளர்கள், 5 நாளான...