குமரி அஞ்சல்துறை மூலம் சபரிமலை பிரசாதம்

நாகர்கோவில், ஜன. 8:  கன்னியாகுமரி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கணேஷ்குமார் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய அஞ்சல்துறை, திருவிதாங்கூர் தேவஸ்தானத்துடன் இணைந்து, சபரிமலை சாமி ஐயப்பன் பிரசாதத்தை உங்கள் வீடுகளில் வழங்க ஏற்பாடு செய்துள்ளது. சபரிமலை பக்தர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு ஆகும். உங்கள் அருகிலுள்ள அஞ்சலகங்களில் ரூ.450 செலுத்தி முன்பதிவு செய்வதன் மூலம், அரவணை பாயசம், நெய், மஞ்சள், குங்குமம், விபூதி மற்றும் அர்ச்சனை பாயசம் ஆகியவை அடங்கிய பிரசார பாக்கெட் விரைவு அஞ்சல் மூலம் உங்கள் முகவரிக்கு அனுப்பப்படும். இந்த வசதி கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை அஞ்சலகங்களிலும் மற்றும் அனைத்து துணை அஞ்சலகங்களிலும் உள்ளது. சபரிமலை செல்ல இயலாத பக்தர்கள், சாமி ஐயப்பன் அருளை இல்லத்தில் பெற்றிட இது ஒரு சிறப்பான வாய்ப்பு ஆகும். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: