புதுச்சேரியில் புதிதாக 34 பேருக்கு கொரோனா

புதுச்சேரி, ஜன. 7: புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் கூறியதாவது: புதுச்சேரி மாநிலத்தில் நேற்று 3,557 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி 22, காரைக்கால் 8, மாகே 4 என மொத்தம் 34 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏனாமில் தொற்று பாதிப்பு இல்லை. நேற்றைய தினம் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. 35 பேர் குணமாகி சென்றுள்ளனர். தற்போது 372 கொரோனா நோயாளிகள் உள்ளனர்.  இதில் 157 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 215 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார் .

Related Stories:

>