சங்கராபுரம் அருகே மணிமுக்தாற்றில் அடித்து செல்லப்பட்ட விவசாயி

சங்கராபுரம், ஜன. 7: சங்கராபுரம் அருகே மணிமுக்தாற்றில் விவசாயி அடித்து செல்லப்பட்டார். அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த தும்பை கிராமத்தை சேர்ந்தவர் அய்யாசாமி(55). விவசாயி. இவருக்கு மணிமுக்தாறு செல்லும் பாச்சேரி கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது. தற்போது சங்கராபுரம் பகுதியில் அதிகளவு கனமழை பெய்து வருவதால் நேற்று காலை அய்யாசாமி அவரது விவசாய நிலத்தை பார்க்க சென்றார். அங்கு நிலத்தை பார்த்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பினார். அப்போது மணிக்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் ஆற்றை கடந்து சென்றுள்ளார்.

இதில் அவர் திடீரென ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து அவரை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து அப்பகுதி மக்கள் சங்கராபுரம் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை, வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் வந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்ட விவசாயியை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இரவு நேரம் ஆகியதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இதனால் இன்று மீண்டும் தேடும் பணியில் ஈடுபட உள்ளனர். மணிமுக்தாற்றில் விவசாய அடித்து செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>