விசா முடிந்ததால் வெளிநாட்டை சேர்ந்தவர் கைது

வானூர், ஜன. 7:  விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் பகுதி, கோட்டக்கரையில் உள்ள தனியார் விடுதியில் உமுருண்டி நாட்டை சேர்ந்த குலோவிஸ்(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2016ம் ஆண்டு, மார்ச் மாதம் ஆரோவில் வந்து தங்கி இருந்து வருகிறார். கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் அவரது விசா முடிந்து விட்டது.

ஆனால் அவர் அவரது சொந்த நாடுக்கு செல்வில்லை. மேலும், அப்பகுதியில், சமையல் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து வந்து தங்கி இருப்பவர்களின் விவரம், விசா முடிந்தும் நாடு செல்லாமல் இருப்பவர்களின் தகவல்களை போலீசார் சேகரித்தனர். அதில், குலோவிஸ் அவரது விசா முடிந்தும், வெளிநாடு செல்லாதது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>