சாலையில் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு

திட்டக்குடி, ஜன. 7: ராமநத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காஞ்சிபுரத்தில் வீட்டை காலி செய்த ஒருவர் வீட்டு பொருட்களை லாரி ஒன்றில் ஏற்றி திருச்சிக்கு அனுப்பி வைத்தார். லாரியை சசிகுமார் (24) என்பவர் ஓட்டி வந்துள்ளார். கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்துள்ள லக்கூர் கைகாட்டி அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்த லாரி தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது.

இதில் லாரி டிரைவர் மற்றும் அவரது உதவியாளர் காயமின்றி உயிர் தப்பினர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ராமநத்தம் போலீசார் டிராக்டர் மூலம் லாரியை மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர். இதனால்  தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories:

>