×

நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

உளுந்தூர்பேட்டை, ஜன. 7: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டை காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எறையூர் கிராமத்தில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்தவரை மடக்கிப்பிடித்து விசாரித்தனர்.

அப்போது, அவரிடமிருந்து ஒரு நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்த போலீசார் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்த எறையூர் கிராமத்தை சேர்ந்த அபிரகாம் மகன் குழந்தைராஜ் (30) என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Country gunman ,
× RELATED ₹5 லட்சம் நகை மோசடி வழக்கில் வாலிபர் கைது