நெய்வேலி, ஜன.7:நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயிற்சி (அப்ரண்டீஸ்) பெற்று உள்ளனர். பயிற்சி முடித்து 24 ஆண்டுகளாகியும் இதுநாள் வரை வேலை வழங்க வில்லை. இந்நிலையில் என்எல்சி நிர்வாகம் தங்களுக்கு வேலை வழங்கக்கோரி நேற்று 400க்கும் மேற்பட்டோர் நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் எதிரில் உள்ள சிஐடியு அலுவலகத்தில் என்எல்சி அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.