வேலூர், குடியாத்தத்தில் மறியல் போராட்டம்

வேலூர், ஜன.7: வேளாண், தொழிற் திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலூர், குடியாத்தத்தில் மறியலில் ஈடுபட்ட சிடிஐடியு சங்கத்தினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர். மத்திய, மாநில அரசுகளின் வேளாண் திருத்த சட்டங்கள், தொழிலாளர் திருட்ட சட்டங்களை திரும்ப பெற வேண்டும். மின்சார மசோதா 2020ஐ திரும்ப பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் நேற்று மாநிலம் தழுவிய மறியல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி வேலூரில் தலைமை தபால் நிலையம் அருகில் சிஐடியு மாவட்ட செயலாளர் காசிநாதன் தலைமையில் மறியல் நடந்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார் காசிநாதன் உட்பட 20 பேரை கைது செய்து திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்தனர். அதேபோல் குடியாத்தம் பஸ் நிலையம் அருகில் மறியலில் ஈடுபட்ட 30 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

வேளாண், தொழிற் திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலூர் தலைமை தபால் நிலையம் அருகில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories:

>