வேளாண் சட்டம் எதிர்த்து ஆர்ப்பாட்டம்

செய்யாறு, ஜன.7: செய்யாறு பஸ் நிலையம் எதிரே நேற்று சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் வே.சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆர்.பாரி, வி.எம்.வெங்கடேசன், கே.செல்வம், ஆனந்தன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக நிறைவேற்றிய புதிய விவசாய விரோத வேளாண் சட்டங்கள், மின்சார சட்டம் 2020ஐ திரும்பப் பெற வேண்டும், பொதுத்துறைகளை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கோஷமிட்டனர். செய்யாறு பஸ் நிலையம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியுவினர்.

Related Stories:

>