தமிழக சட்டமன்ற தேர்தலில் பட்டியல் தயாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

வேலூர், ஜன.6: தமிழக சட்டமன்ற தேர்தலில் 80 வயது கடந்தவர்களுக்கு தபால் வாக்குகள் வழங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதால், பட்டியல் தயாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலையொட்டி வேலூர் மாவட்ட வாக்காளர் பட்டியலில் சுருக்க திருத்தம் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். டிஆர்ஓ பார்த்தீபன் முன்னிலை வகித்தார். இதில் வேலூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஷோபனா கலந்து கொண்டு பேசியதாவது: வேலூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலுக்காக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்றவற்றிற்கு சிறப்பு முகாம்கள் மூலம் விண்ணப்பங்கள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் பெறப்பட்டு விண்ணப்பங்கள் ஆய்வு செய்யும் பணிகள் முடிந்துள்ளது.

ெகாரோனா தடுப்பு நடவடிக்கையாக 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்குகள் வழங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்காக 80 வயது கடந்த வாக்காளர்கள் கணக்கெடுப்பு பணிகள் நடத்தி பட்டியல் தயாரிக்க வேண்டும். வாக்களிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் நடத்த வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு தயார் நிலையில் வைக்க வேண்டும். ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என கூடுதல் வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்படும். அதற்கு ஏற்ப பணியாளர்களின் பட்டியலையும் தயாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: