×

மேப்பூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம்

திருவள்ளூர், நவ.15: பூந்தமல்லி ஒன்றியம், மேப்பூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. முகாமில் வட்டாட்சியர் உதயம், தனி வட்டாட்சியர் காந்திமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஷ் பாபு, அமிழ்தமன்னன், வருவாய் ஆய்வாளர் கல்பனா, கிராம நிர்வாக அலுவலர் அருள்செல்வி ஆகியோர், பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர். அப்போது, பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக மொத்தம் 409 மனுக்களை அதிகாரிகளிடம் வழங்கினர்.

இதில், மகளிர் உரிமைத் தொகை கோரி 280 பேர் விண்ணப்பித்திருந்தனர். இம்முகாமில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பூமிநாதன், ஊராட்சி செயலர் எழில்குமார், திமுக கிளை தலைவர் ஏழுமலை, கிளை செயலாளர் மாரியப்பன், முரளி, கிளை நிர்வாகிகள் ஆறுமுகம், அழகிரி, ஆனந்தன், தியாகு, மதியழகன், கலை சூரியன், ராகவேந்திரன், ஜெய், அனைத்துத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

Tags : Stalin ,Maypur Panchayat ,Thiruvallur ,Poontamally Union ,Taluka Magistrate Udayam ,Taluka Magistrate Gandhimathi ,Mahesh Babu ,Amidhamannan ,Revenue Inspector ,Kalpana ,Village Administrative Officer ,Arulselvi ,
× RELATED அம்பேத்கர் நினைவு நாளில் 2034...