×

பீகார் தேர்தலில் வாக்களித்து வெற்றி பெற வைத்த மக்களுக்கும், உறுதுணையாக இருந்த பிரதமருக்கும் தலைவணங்குகிறன்: முதல்வர் நிதீஷ்குமார்

பாட்னா: பீகார் தேர்தலில் வாக்களித்து வெற்றி பெற வைத்த மக்களுக்கும், வெற்றி உறுதுணையாக இருந்த பிரதமர் மோடிக்கும் தலைவணங்குவதாக முதல்வர் நிதீஷ்குமார் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பீகாரில் நடைபெற்ற பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இரவு 8 மணி நிலவரப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் 202 தொகுதியில் முன்னிலையில் உள்ளன. பாஜக 76 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 56 இடங்களிலும் வெற்று தனிப்பெரும்பான்மையைப் பதிவு செய்துள்ளன. இதன்படி பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது.

இந்நிலையில் பீகார் தேர்தலில் வாக்களித்து வெற்றி பெற வைத்த மக்களுக்கும், வெற்றி உறுதுணையாக இருந்த பிரதமர் மோடிக்கும் தலைவணங்குவதாக முதல்வர் நிதீஷ்குமார் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவரின் பதிவில்;

“மாநில மக்கள் எங்கள் அரசாங்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். இதற்காக, மாநிலத்தின் அனைத்து மரியாதைக்குரிய வாக்காளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியில் முக்கியப் பங்காற்றிய பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முழுமையான ஒற்றுமையை வெளிப்படுத்தி, பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. இந்த மகத்தான வெற்றிக்கு, அனைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டாளிகளான சிராக் பாஸ்வான், ஜிதன் ராம் மஞ்சி மற்றும் உபேந்திர குஷ்வாஹா ஆகியோருக்கு நன்றி .

உங்கள் ஆதரவுடன், பீகார் மேலும் முன்னேறும், மேலும் நாட்டின் மிகவும் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக மாறும்” என தெரிவித்துள்ளார்.

Tags : Bihar elections ,Chief Minister ,Nitish Kumar ,Patna ,Modi ,Bargain ,Bihar ,
× RELATED கோவாவில் கேளிக்கை விடுதியில்...