×

வெளிமாநிலத்தவருக்கு வேலை வழங்க கூடாது சுமைப்பணி தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தம்

திருச்சி, நவ.13: வெளிமாநிலத்தவருக்கு வேலை வழங்க கூடாது என்று சுமைப்பணி தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கி உள்ளனர். இதுகுறித்து சிஐடியூ லாரி புக்கிங் ஆபீஸ் ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் மாவட்ட செயலாளர் ராமர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் ரெகுலர் லாரி செட்டுகளில் 350 சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இதில் ஒரு லாரி செட்டில் 20 ஆண்டுகளாக வேலை செய்து வரும் 12 தொழிலாளர்களை நீக்க முயற்சித்து அவர்களுக்கு பதிலாக வெளிமாநில தொழிலாளர்களை வைத்து வேலை செய்வதை கண்டித்தும். 20 ஆண்டு காலமாக வேலை செய்து வந்த 12 தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்ககோரி கடந்த 7ம் தேதி சிஐடியூ சுமைப்பணி தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அப்போது இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என காவல்துறை அளித்த உத்தரவை மீறி அன்று மாலை லாரிகளில் வந்த சரக்குகளை மாற்றுத் தொழிலாளர்களை வைத்து இறக்கப்பட்டது. இதை கண்டித்து அன்று இரவு சுமைப்பணித் தூக்கும் தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுவேலை நிறுத்த போராட்ட நடத்தினர். இந்நிலையில் இது நாள் வரை அந்த தொழிலாளர்களுக்கு வேலை வழங்காததை கண்டித்து நேற்று முதல் சுமைப்பணி தூக்கும் தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் துவங்கி உள்ளனர் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Trichy ,CITU Lorry Booking Office General Workers Union District ,Ramar ,Trichy Gandhi… ,
× RELATED கல்லக்குடியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்