×

இலையூர்- மருதூரில் ரூ.43.83 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் துவக்கம்

ஜெயங்கொண்டம், நவ.13: ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஆண்டிமடம் ஒன்றியம், இலையூர் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 2024-2025-ன் கீழ், ரூ.20.13 லட்சம் மதிப்பீட்டில், புதிதாக கட்டப்பட்டுள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிடம், இலையூர் ஊராட்சியில் ரூ.11.00 லட்சம் மதிப்பீட்டில், புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடை கட்டிடம், மருதூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்- II- 2024-2025-ன் கீழ்,ரூ 12.70 லட்சம் மதிப்பீட்டில், புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடை (Type-I) கட்டிடம்,
ஆகியவற்றை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் திறந்து வைத்து, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில், கூட்டுறவு துணைப் பதிவாளர் (பால்வளம்) நாராயணசாமி, கூட்டுறவு துணைப் பதிவாளர் (பொது விநியோகம்) சாய்நந்தினி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருள்சாமி (வ.ஊ),அன்புச்செல்வன் (கி.ஊ), கூட்டுறவு சார்பதிவாளர்கள் கார்த்திகேயன், மணிபாரதி, ஆனந்தி, ஆண்டிமடம் தெற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் கலியபெருமாள், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் தர்மதுரை, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பானுமதி இராஜேந்திரன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் அறிவழகன் மற்றும் அரசு அலுவலர்கள், ஆண்டிமடம் தெற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

 

Tags : Ilaiyur- Marudhur ,Jayankondam ,Ilaiyur panchayat ,Andimadam ,Milk Producers Cooperative Society ,Ilaiyur panchayat… ,
× RELATED ஆண்டிமடம் அருகே லயன் சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்